பக்கங்கள்

பார்வை

புதன், 24 ஏப்ரல், 2013

விடுகதையாகி இன்னும் விடை காணாத என் வாழ்க்கை



உள்ளத்தால் அழுது உதட்டால் சிரிக்குறேன்.என்னை உள்ளத்தால் அழவைத்த உன்னை கடவுள் என்கிறார்கள்.மற்றவர்களை உதட்டால் சிரிக்க வைக்க முயன்ற என்னை பைத்தியகாரன் என்கிறார்கள்.

கொடுப்பவன் நீ என்கிறேன்.புகழ்வது பிடிக்க வில்லை என்பாதாலோ என்னவோ என் சந்தோசத்தை மட்டும் எடுப்பவன் நீ ஆகிறாய்.



விரும்பி வந்த நட்பை விலக வைத்தாய்
விலகி சென்ற துன்பத்தை நெருங்க வைத்தாய்
நினைத்ததை முடிப்பவன் என்பதால் தானோ
முடிக்க நினைக்கிறாய் என் சந்தோசத்தை

வீழ்வதெல்லாம் எழுவதற்கு என்கிறார்கள்
ஆனாலும் வீழும்போதெல்லாம் விலகியே நிற்கிறார்கள்.எழுந்து நிற்கும் போது விரும்பியது போல் வருகிறார்கள்.வாழ்த்த அல்ல.தருணம் பார்த்து மீண்டும் வீழ்த்த.விரும்பிய போதெல்லாம் வித்தைகள் செய்ய விளையாட்டு பொம்மையா என் வாழ்க்கை

இரவியும் சந்திரனும் என் பெயரில் கலந்ததாலோ
இருளும் பகலும் இரண்டும் கலந்து
இன்பம் துன்பம் இரண்டும் இணைந்து
துன்பம் மட்டும் எஞ்சி நிற்கிறதோ

என்ன செய்வது நானும்
வழமைபோல் ஏக்கத்துடன்
நாளையாவது நன்றாக விடியும் என்ற எண்ணத்துடன்
காத்திருக்கிறேன் கண்களில் நீருடன்
"விலகியதெல்லாம் விரும்பி வரும் என்ற நம்பிக்கையில்"

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.